| ஆந்திராவில் பிரபலமான உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உணவுப் பட்டியலில் மாட்டுக்கறி சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுக்கறி திருவிழா நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் முடிவுசெய்தனர். இதற்கு மற்றொரு பிரிவு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் பல்வேறு வாகனங்களுக்கு மாணவர்கள் தீ வைத்து தங்களுடைய போராட்டத்தை வலுவாக்கினர். இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ![]() |
மாட்டுக்கறிக்கு கலவரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
