தென்காசி: குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நீக்கப்பட்டது.தற்போது வாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் பிரதேசங்கள், அருவிகள் இருக்கும் இடங்களில் குவிந்து வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர். கோடை காலத்தின் துவக்கத்திலேயே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பேரருவியில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பேரருவியில் குளி்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
குற்றாலம் ஐந்தருவியில் நான்கு கிளைகளில் தண்ணீர் அளவு குறைவாக இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதிலும் ஆனந்தமாகக் குளித்து மகிழ்கின்றனர்.