
| பிரான்ஸிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தியதாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, பிரான்ஸிலிருந்து வந்த விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை(8.4.2012) இரவு சோதனை நடத்தப்பட்டது. இதில் காரைக்காலைச் சேர்ந்த அப்துல் காதர் (34) உடமைகளை சோதனை செய்தபோது, வெளிநாட்டு சாக்லேட், பிஸ்கெட் பாக்கெட்டுகளில் தங்க நாணயங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் கொண்டு வந்த பெட்டியில் இருந்த 350 தங்க நாணயங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அத்துடன், அவரது சட்டையில் 18 தங்க நாணயங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன்மூலம் அவரிடமிருந்து மொத்தம் 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.81 லட்சம் ஆகும். இது தவிர அவரிடம் இருந்து வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த பொலிஸ் விசாரணையின்போது, பிரான்ஸில் ஓட்டல் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். |