செக்ஸுக்கு அழைத்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பெயரை சொல்லிடுவேன் - அனல் கிளப்பும் நடிகை தாரா!

ஹைதராபாத்: பெரும் விபச்சார குற்றச்சாட்டில் சிக்கி ஜெயலில் இருக்கும் பிரபல நடிகை தாரா சவுத்ரி, அடுத்தடுத்து பகீர் தகவல்களைச் சொல்லி  அனல்  கிளப்பி வருகிறார்.

ஆந்திராவின் இரு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பி வற்புறுத்தினர். அவர்கள்தான் என்னை தந்திரமாக சிக்க வைத்துவிட்டனர். அவர்கள் பெயர், விபரங்களை வெளியிடுவேன் என்று தாரா கூறியுள்ளார்.

சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை தாரா சவுத்ரியை போலீசார் சமீபத்தில் திடீரென கைது செய்தனர்.

பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் ஒரு இளம் பெண் அளித்த புகாரின் பேரில் தாரா சவுத்ரி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாரா சவுத்ரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியிருப்பது தெரிய வந்தது. சினிமா ஆசையில் வரும் பெண்களை மயக்கி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்களுக்கு விருந்தாக்கியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போலீஸ் எஸ்பி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் தொடர்பு வைத்து பெண்களை சப்ளை செய்துள்ளார் தாரா. கோவில்களுக்கு செல்லும்போது வி.ஐ.பி. தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கோவில் நிர்வாகிகளிடம் உயர் போலீஸ் அதிகாரிகளே தாராவுக்காக பரிந்துரை செய்வது உண்டாம். இதை ஏற்க மறுத்த கோவில் நிர்வாக அதிகாரிகள் பலரை தாரா சவுத்ரி நிர்ப்பந்தத்தால் இடமாற்றம் செய்துள்ள தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

தாரா சவுத்ரி மீது மேலும் பல பெண்கள் நேரில் வந்து புகார் அளித்த வண்ணம் உள்ளதாகவும் அவரை போலீஸ் காவலில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

ஒரு நேரத்தில் தனக்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருந்த போலீஸ், இப்போது அப்படியே யு டர்ன் அடித்து நிற்பது தாராவை அதிர வைத்துள்ளது.

தன்னை சிக்க வைத்தவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தவும் அவர் தயாராகிவிட்டார்.

தன்னை கைது செய்தது குறித்து தாரா சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், "இந்த விபச்சார வழக்கில் என்னை சதி செய்து சிக்க வைத்து விட்டனர். நிறைய பேர் ஜாதகம் என் கைவசம் உள்ளது. அவர்களை ஒரு கை பார்ப்பேன். நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பலரது ரகசியங்களை வெளியிடுவேன்.

இரண்டு எம்.பி.க்கள் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்தனர். நான் சம்மதிக்கவில்லை. சில எம்.எல்.ஏ.க்களும் என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் பெயர்களை வெளியிடுவேன். 

என்மேல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிடுவேன். என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன். ஆந்திர போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துவேன்," என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: