மதத்தின் பெயரால் பெண்களைக் கொன்று தின்றவர்கள் கைது !



Brazil police arrest 3 for murdering women and cannibalismமதத்தின் பெயரால் பெண்களைக் கொடூரமாகக் கொன்று , உடல் உறுப்புகளை வெட்டி சமைத்துத் தின்ற மூவரை பிரேசில் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
உலகைத் தூய்மைப்படுத்தல் மற்றும் மக்கள்தொகை குறைத்தல் என்னும் மதப்பிரிவைச் சார்ந்த ஜார்ஜ் பெல்ட்ராவோ நெக்ரோமாண்ட்டே என்பவரும்  அவருக்கு உடந்தையாக அவரது மனைவி இசபெல் கிறிஸ்டினா ஒலிவீரா டா சில்வா மற்றும் புரூனா கிறிஸ்டினா ஒலிவீரா (25) ஆகிய 2 பெண்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மனச் சிதைவின் வெளிப்பாடுகள் என்னும் நூலை எழுதியுள்ள ஜார்ஜ் வீட்டிலிருந்து 3 பெண்களின் எலும்புகளை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். "அந்தப் பெண்களை உலகில் இருந்து விரட்ட எங்களுக்கு அசரீரி உத்தரவிட்டது. அதன்படி செயல்பட்டோம். கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் சாத்தான்கள்" என்று இவர்கள் கூறியுள்ளனர். "பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்து அவர்களுடைய தோலை உரித்து, உடல்களைத் தூய்மைப்படுத்த மதச்சடங்குகள் செய்தோம். பின்னர் சதைகளைச் சமைத்துச் சாப்பிட்டோம். மேலும், சதைகளில் உணவு சமைத்து அக்கம் பக்கத்தினருக்கும் விற்பனை செய்தோம்" என்று புத்தகத்தில் விரிவாகக் கூறியுள்ளனர். இவர்கள் மேலும் பல பெண்களைக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: