பிணவறையிலிருந்து 12 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை



அர்ஜென்டியானாவின் வடபகுதி மாகாணமான சரகோவில் அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணான அனாலியா பவுட்டர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். அடையாளம் கண்டறிய முடியாத நோயால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து அந்த குழந்தை பிணவறை கொண்டு செல்லப்பட்டு பிணங்கள் வைக்கப்படும் இழுவறை (டிராயர்) பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.
உயிர் இருந்தது பிணங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் வரை, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அந்த அறை குளிரூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 12 மணி நேரத்துக்கு பின்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருந்த அனாலியா கடைசியாக தனது குழந்தையின் முகத்தை பார்த்து விட்டு செல்ல ஆசைப்பட்டார்.
பிண அறைக்கு சென்று தனது குழந்தை வைக்கப்பட்டு இருந்த இழுப்பறையை (டிராயர்) திறந்து பார்த்தார். அப்போது குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டது. உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவரிடம் ஓடிவந்தார். அந்த குழந்தைக்கு தேவையான அவசர சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது.
சில மணி நேரத்துக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை வைத்து பராமரிக்கப்படும் பிரிவில் வைத்து அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நிலை சீராகவும், நல்ல நிலையிலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிணவறைக்கு சென்று 12 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் திரும்பி வந்திருப்பது தாய்க்கு மகிழ்ச்சியையும், மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: