கணவன் மனைவி பிரச்சனை இந்தியாவிலேயே நம்பர் 1 தமிழகம்!

 டெல்லி:  கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. 

திருமண பதிவாளர் அலுவலகம் மத்திய சுகாதாரத் துறையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்திலும், 4.1 சதவீதத்தோடு டெல்லி கடைசி இடத்தில் உள்ளன.

இந்த பட்டியலில் 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஒடிஷா (7.2), இமாச்சலப் பிரதேசம்(7.1) மற்றும் மகாராஷ்டிரா(7) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

இதில் மகாராஷ்டிராவில் 10 சதவீதம் பெண்கள் விதவைகளாகவோ, விவாகரத்தானவர்களாகவோ, கணவரைப் பிரிந்து வாழ்பவர்களாகவோ உள்ளனர். 2.9 ஆண்கள் மனைவியை இழந்தவர்களாகவோ, விவாகரத்தானவர்களாகவோ, மனைவியைப் பிரிந்து வாழ்பவர்களாகவோ உள்ளனர்.

2010ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மக்களில் 57.7 சதவீதம் பேர் திருமணமானவர்கள், 35.9 சதவீதம் பேர் திருமணமே செய்து கொள்ளாதவர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 45.4 சதவீதம் பேர் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்கின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: