தேசிய அளவில் தமிழகத்தின் மக்கள் தொகை பங்கு 0.11% சரிவு!

Tamilnadu டெல்லி: 2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 6.07 சதவீதமாக இருந்த தமிழக மக்கள் தொகை 2011ம் ஆண்டில் 5.96 சதவீதமாக சுருங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவும், தமிழகத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும் தேசிய அளவில் தமிழகத்தின் மக்கள் தொகை பங்கு சரிந்துள்ளது.

2011ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட சென்ஸஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியாகி வருகின்றன.

இதன்படி, தமிழகத்தின் இப்போதைய மக்கள் தொகை 7.21 கோடியாகும். இது 10 ஆண்டுகளுக்கு முன் 6.24 கோடியாக இருந்தது.

2001ம் ஆண்டில் தமிழக மக்கள் தொகையில் ஆண்கள் 31,400,909 பேர், பெண்கள் 31,004,770 பேர் ஆக இருந்தனர். 2011ம் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை 36,158,871 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 35,980,087 ஆகவும் உயர்ந்துள்ளது.

2001 முதல் 2011ம் ஆண்டு வரை தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.60 சதவீதமாக இருந்தது. 1991-2001ம் ஆண்டு வரை இது 11.19 சதவீதமாக இருந்தது.

அதே நேரத்தில் 2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 6.07 சதவீதமாக இருந்த தமிழக மக்கள் தொகை 2011ம் ஆண்டில் 5.96 சதவீதமாக (அதாவது 0.11%) சுருங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 995 பெண்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 986 பெண்களே இருந்தனர்.

மாநிலத்தில் 6 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 6,894,821 ஆகும். இதில் ஆண் குழந்தைகள் 3,542,351 பேர், பெண் குழந்தைகள் 3,352,470 பேர் ஆவர்.

தமிழர்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கி்ட்ட்டத்தட்ட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 80.33% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 86.81% பேரும், பெண்கள் 73.86% பேரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் 83.28% பேரும், பெண்கள் 64.91% பேரும் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர்.

மொத்த மக்கள் தொகையில் 48.45% பேர் நகர்ப் புறங்களிலும் 51.55% பேர் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர். நகர்ப் புறங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.16% ஆக உள்ள நிலையில், ஆச்சரியகரமாக கிராமப் பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி 6.49% ஆகக் குறைந்துள்ளது.

நகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 998 பெண்கள் உள்ளனர். ஆனால், கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு ஆயிரம் ஆண்களுக்கும் 993 பெண்களே உள்ளனர்.

6 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைகளில் ஒவ்வொரு ஆயிரம் ஆண் குழந்தைக்கும் நகர்ப் புறங்களில் 957 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கிராமப் பகுதிகளில் இது 937 பெண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

இதன்மூலம் கிராமப் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், பெண் குழந்தைகள் பிறப்பும் குறைவாகவே உள்ளது தெரிய வருகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: