ராணுவ தளபதி வி.கே.சிங், அப்பழுக்கற்ற நற்பெயர் கொண்டவர்:அழுக்கு மூட்டை அத்வானி



பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வருகிறார். ஆஜ்மீர் தர்காவுக்கும் செல்கிறார்.
 இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பை வந்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப், இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு வாக்குறுதி அளித்தார்.
இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த அந்த வாக்குறுதியை காப்பாற்றுமாறு பாகிஸ்தானை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் ஒரேயடியாக அழிக்குமாறும் பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.
மேலும், தனது வலைத்தள பக்கத்தில் அத்வானி எழுதி இருப்பதாவது:-
கடந்த ஜனவரி மாதம், ராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகள், மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், டெல்லியை நோக்கி முன்னேறி வந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
அந்த செய்தியும், அதற்கு பிறகு வெளியான தகவல்களும், மிகவும் பீதி ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன. மத்திய அரசு அமைப்புகளிடையே பரஸ்பர நம்பிக்கை இன்மை, ஆழமாக புரையோடிப் போய் இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
இந்த நிகழ்வு, கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பதற்றமான நிகழ்வை நினைவூட்டுகிறது. அப்போது நடைபெற்ற தேர்தலில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தோல்வி அடைந்தார். அப்போது, டெல்லி மாநில கவர்னராக இருந்த ரமேஷ் பண்டாரியை அப்போதைய மத்திய உள்துறை மந்திரி பூட்டாசிங் தொடர்பு கொண்டார்.
அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லிக்கு ஊர்வலமாக வந்து பாராளுமன்றத்தையும், ஜனாதிபதி மாளிகையையும் முற்றுகையிடப் போவதாக வதந்தி உலவுவதாக தெரிவித்தார். அதற்கு ரமேஷ் பண்டாரி, டெல்லி மாநில அரசுக்கு அத்தகைய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும், அந்த வதந்தியை நம்பி, பூட்டாசிங், டெல்லியில் ராணுவத்தை குவித்தார். ரமேஷ் பண்டாரி எழுதிய சுயசரிதையில் இச்சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அத்வானி எழுதி உள்ளார். 'ராணுவ தளபதி வி.கே.சிங், அப்பழுக்கற்ற நற்பெயர் கொண்டவர்' என்றும் இந்த செய்தியில் அத்வானி எழுதி உள்ளார்.
 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: