மின்கட்டண குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

 சென்னை : ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மின்கட்டணத்தில், குறைப்பு செய்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர் மின்வெட்டு, பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்டவைகளால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மின்கட்டண உயர்வு இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. இதனால்,மக்கள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

குறைப்பு விபரம் : இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். அதன்படி,

1 முதல் 100 யூனிட்களுக்கு - ரூ. 1.10 லிருந்து ரூ. 1

101 முதல் 200 யூனிட்களுக்கு - ரூ. 1.80 லிருந்து ரூ. 1.50

2 மாதங்களில் 500 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு

1 முதல் 200 யூனிட் வரை - ரூ. 3லிருந்து ரூ. 2

201 முதல் 500 யூனிட்களுக்கு - ரூ. 3.50 லிருந்து ரூ. 3 ஆக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

ரூ. 740 கோடி நஷ்டம் : மின் கட்டணம் குறைப்பால் , சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால், மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 740 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மானியமாக அரசு மின்வாரியத்திற்கு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கட்சிகள் வெளிநடப்பு : முதல்வரின் அறிவிப்புக்கு முன்னதாக, மாநில அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இவ்விவகாரம் தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இக்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: