கீழே இருந்து 1,102 அடி உயரங்களைக் கொண்டது இந்தப் பாலம். Aizhai என்று பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்தப் பாலம் தான் தற்போது உலகின் நீளமான மற்றும் உயரமான பாலம் ஆகும். 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பாலத்தின் வேலைகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தன. சீனாவின் Hunan மாகாணத்தில் உள்ள Jishou பிராந்தியத்தில் போக்குவரத்தைச் சீர் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் இன்றைய தினம் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 1,888 லைற்றுகள் இந்தப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 3,858 அடிகள் நீளமானது என்பது இந்தப் பாலத்தின் சிறப்பாகும். |
உலக சாதனையை முறியடித்த சீனப் பாலம்!
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail