மாஸ்கோ: 43 பயணிகளுடன் சைபீரியா நோக்கிசென்ற ரஷ்ய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 31 பேர் பலியாகி விட்டதாகவும், 12 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்ய நேரப்படி காலை 5. 30 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்ற நில நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து விலகியது. இதனையடுத்து பதட்டமடைந்த விமான அதிகாரிகள் அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறையினருடன் தொடர்பு கொண்டனர். எவ்வித முன்னேற்மும் இல்லை இறுதியில் விமானம் நொறுங்கி கிடப்பதாக தகவல் வந்தது.
இது குறித்து ரஷ்ய அவசரநிலைக்கான துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இர்னியா ஆன்டிரியானோவா கூறியதாவது: இரட்டை இன்ஞ்சின் பொறுத்தப்பபட்ட ஏ.டி.ஆர்., 72 என்ற ரக விமானம் டியூமென் நகரின் அருகில் உள்ள ரோஷ்சினோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சூர்குட் நோக்கி சென்ற சில நிமிடங்களில் விபத்தில் வானிலை கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. மேற்கு சைபீரியாவில் உள்ள டியூமென் நகரில் இருந்து 35 கி,மீட்டர் தொலைவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 12 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.