கொலம்பியாவில் 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை



கொலம்பியாவில் 10 வயது சிறுமி தாயாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறுமி தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் வயூ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு 10 வயது சிறுமி ஒருத்தி திடீரென கர்ப்பமானாள்.
39 வாரங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றும், ஆனால் பிரசவம் சற்று சிக்கலாக இருந்ததால் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்கப்பட்டது என்றும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுமியை ஏமாற்றிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும், புகார் வந்தால் அவரை கைது செய்யவும் கொலம்பிய சட்டத்தில் இடம் உள்ளது.
ஆனால் வயூ பழங்குடியின மக்களுக்கு சட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொலம்பிய பழங்குடியின சிறுமி குழந்தை பெற்றெடுத்ததன் மூலம், இவள் தான் உலகிலேயே மிகக் குறைந்த வயதுள்ள தாய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: