சென்னையில் புதிய மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம்

Mahindra Reva சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மஹிந்திரா ரேவா எலக்ட்ரிக் கார் தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா நிறுவனம் வடிவமைத்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் கார் பெரும் ஆவலைத் தூண்டியது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ பயணம், புதிய வசதிகளுடன் ரேவா என்எக்ஸ்ஆர் கார் விற்பனைக்கு வர இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இந்த காரை தற்போது ரேவா நிறுவனம் தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த காரை விற்பனைக்கு கொணடு வர மஹிந்திரா ரேவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி மாடல்களில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

லைப் நல்லா இருக்க லைப் ஸ்டைலை மாற்றுங்க!

 உடல் உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது இந்த இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு இதயநோய் எளிதாக வரும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். மாதத்திற்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடப்பவர்களுக்கு இதயநோய் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதய நோய் என்பது மட்டுமல்ல, இதய வால்வுகள் தசை நார்கள் கூட பாதிக்கலாம். நாமெல்லாம் நினைப்பது போல மாரடைப்பு ஒன்றும் புதிய யுகத்தின் புதிய வரவல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டு முன்னாலேயே திருமூலர் மாரடைப்பை பற்றி பாடியுள்ளார்.

`வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே வாயைக்கட்டினால், நோயைக் கட்டலாம்' என்பது சித்தர்வாக்கு. எனவே `உண்டியை சுருக்கி', ஆயுள் ரேகையை நீட்டலாம்.

சாத்வீகமான குணங்கள்

நாம் என்ன உண்ணுகிறோமோ அது நமது உடல் நலம், மனநலம் இரண்டையும் தீர்மானிக்கிறது. பழங்கால காய்கறிகள் போன்றவை நமது உடலைப் பேணுவதுடன் அமைதியான சாத்வீகமான குணங்களை வளர்க்கும்.

இதய நோய்க்கான அஸ்திவாரம் சிறு வயதிலேயே உணரப்படுகிறது. எப்போது குழந்தை தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறதோ அன்றே இதயத்தின் ரத்த நாளங்களில் கொழுப்பு படர ஆரம்பித்துவிடுகிறது. ஆரம்பித்து விடுகிறது. எனவே கண்டதையெல்லாம் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொண்டால் சிறு வயதிலேயே ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் எல்லாம் `கியூ' வரிசையில் வந்து, மாரடைப்புக்கு அஸ்திவாரம் போட்டுவிடும்.

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தை முதலே பெற்றோர்களும், பிட்ஸா, மசாலா பண்டங்களை உண்ணக்கொடுத்து குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலத்தை கெடுத்துவிடுகின்றனர். அதிக கொழுப்பு உண்ண உணவுகள் ரத்தக் குழாய்களில் படியும் படி செய்து இளம் வயதிலேயே இதய நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தொலைகாட்சியும் காரணம்

டி.வியும், கம்ப்யூட்டரும் இன்றைக்கு பெரும்பாலானவர்களின் பொழுது போக்காக உள்ளது. மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதுதான் உடலுக்கு சரியாக உழைப்பில்லாமல் போய்விடுகிறது. இவற்றிலிருந்து வரும் கதிர் வீச்சு மற்றும் எலக்ட்ரோ ரேடியேஷன் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிகரிக்கும் இதயத்துடிப்பு

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க வேண்டும் என எப்போதும் பரபரப்பாக இருப்பவர்களுக்கு இருதய துடிப்பு அதிகரிக்கிறது இதனால் இதயத்தின் ஒர்க் லோடு அதிகரித்து இதயத்தை பாதிக்கும். இப்படிப்பட்டவர்கள் பொதுவாக `கேரி ஒர்க் அண்ட் புல்லி' என்ற வாழ்க்கை முறையை கை கொள்ளுவதுடன், உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பர் இவர்களை `டைப் ஏ' பர்சனாலிட்டி என்று கூறுவர். இவர்கள் போலின்றி `டைப் பி' மனிதர்கள் அமைதி, நிதானம் ஆகியவற்றின் உருவமாக இருப்பார்கள். இவர்களுக்கு இதய நலம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. `டைப் ஏ' மனிதர்கள் தியானம் செய்து தங்கள் குணநலன்களை மாற்றிக் கொள்ளலாம்.

நூத்துக்கு நூறு

நூறு கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் ஒரு 100 பேர் கூட 100 வருடம் வாழ்வதில்லை. நூறு வருடம் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். 100 வயது வாழ முதல்படி, உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, குறைந்த பட்சம் 8 மணி நேர உறக்கம் ஆகும். இது தவிர `100' மிகி கீழே சர்க்கரை 100 மி.கிக்கு குறைவாக எல்.டி.எல். கொலஸ்டிரால் என்ற செறிவு கொழுப்பு, 100 மி.மீட்டருக்கு குறைவாக ரத்தக் கொதிப்பு இருக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் நடக்க வேண்டும், மாதத்திற்கு 100 கி.மீ. நடக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் தியானம் செய்து மன அமைதி பெறலாம்.

20 – 20 பார்முலா

அசையாமல் பல மணி நேரம் உட்கார்வது காலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உறைய வாய்ப்பு தருகிறது. அவர்கள் பிறகு நடக்கும் போது இந்த ரத்தக் கட்டிகள் இதயத்திற்கு பம்ப் செய்யப்பட்டு மாரடைப்பினை விட கொடிய நோயான `பல்மனோ கொலஸ்ட்ரால்' என்ற நோயை ஏற்படுத்தி, நொடியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதனைத் தவிர்க்க அவர்கள் 20 -20-20 என்ற பார்முலாவை கடை பிடிக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து 20 அடி நடக்க வேண்டும் கண்களில் கண்ணீர் வற்றாமல் இருக்க, விழித்திரையை பாதுகாக்க 20 முறை தூரத்தில் கிட்டத்தில் பார்வையை செலுத்த வேண்டும். 20 முறை வேண்டும் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். அப்போது இதயம் பாதுகாக்கப்படும்.

இன்று மது, போதை என இளைஞர்கள் சுற்றுவதால் 30 வயதிற்குள் மாறிவரும் கலாச்சாரத்தால் பெற்றோர்கள் இறக்கும் முன்பே 20-30 வயது இளைஞர்கள் இறந்து போவது இனியொன்றும் பெரிய அதிசயமாக இருக்காது. வருமுன் காப்பதே சிறப்பு என்பதை நாம் உணர்த்த வேண்டும். இல்லையெனில் லப்டப் என்ற இதய சங்கீதம் `ரம்' `தம்' என மாறி மனிதனின் வாழ்க்கை அபஸ்வரமாக மாறி விடும்.

வாழ்வில் மிகவும் மனதை மயக்கும் விஷயங்கள் அறிவை மயக்கி அழிவிற்கு அச்சாரம் போட்டு விடும். உண்மையான நன்மையான `வானவில்' வண்ணமயமான பழங்கள் காய்கறிகள், ஆகியவையாகும், கண்ட கண்ட உணவுகளை ஒதுக்கி கனிகள் உண்டால் அதிலுள்ள புரோட்டின் உடலில் வயோதிகத்தை தடுத்து இருதய நோய் மற்றும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

மலச்சிக்கலை இல்லாமல் இருக்க பழவகை நார்ச்சத்துள்ள உணவுகள் தினம் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மலம் மற்றும் சிறுநீரில் பிரிந்து செல்லும். ரத்தத்தில் கொழுப்பு குறையும்.

`லைப்ஸ்டைல்' என்றால் ஸ்டைலாக உடை உடுத்துவது அல்ல. சரியான வாழ்க்கை முறை என்று அர்த்தம். ஆகையால் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டால் நம்பிக்கையை கைவிடாமல் வாழ்க்கை முறையை சீராக மாற்றி அமைத்தால் நிச்சயமாக நாம் நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஆரோக்கியமாக வாழலாம்.

அசாமில் படகு கவிழ்ந்ததில் 103 பேர் பலி, 100 பேர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

 துப்ரி: அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் பலியாகினர். சுமார் 100 பேரைக் காணவில்லை.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் தனியார் படகு ஒன்று 300 பயணிகளுடன் பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று வீசிய சுறாவளி காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். சுமார் 100 பேரைக் காணவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 103 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து துணை கமிஷனர் குமுத் சந்திரா கலிதா கூறுகையில்,

300 பயணிகளுடன் புறப்பட்ட படகு துப்ரிகாட்டில் நேற்று மாலை 4.20 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்றபோது புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் அதில் பயணம் செய்தவர்களில் 25 பேர் நீந்தி கரையை அடைந்தனர். இதுவரை மீட்கப்பட்டுள்ளவர்களின் உடல்கள் துப்ரி சிவிக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றார்.

துப்ரிகாட்டில் இருந்து மெடார்டரிக்கு சென்ற படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்தபோதிலும் இருள் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் அசாம் முதல்வர் தருண் கோகாயை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்த கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

பிரம்மபுத்ராவில் மேலும் ஒரு படகு கவிழ்ந்ததில் 12 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருப்பு பணம்: இந்தியர்களின் வங்கிக் கணக்குகளை தர சுவிஸ் சம்மதம்

 டெல்லி:  சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த சில விவரங்களை இந்திய அரசிடம் கொடுக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. 

வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிடம் அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்து கேட்டதற்கு அந்நாடு முதலில் வழங்க மறுத்தது. ஆனால் தற்போது இந்தியர்களி்ன் ரகசிய கணக்குகளை இந்தியாவுக்கு தர சம்மத்திதுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஏப்ரல் 20ம் தேதியன்று ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரட்டைவரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களை அடையாளம் காணக்கூடிய அளவிலான குறிப்பிட்ட விவரங்களைத் தர அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் தரும் விவரங்கள் நிச்சயமாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு பணத்தை தனிநபர்கள் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட முழுவிவரங்கள் கிடைக்காது என்றே தெரிகிறது. எனினும் சுவிட்சர்லாந்து தரும் விவரங்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றே கருதப்படுகிறது. பெரும் போராட்டத்துக்குப் பின்னரே இந்த விவரங்களைத் தர சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்து மட்டுமின்றி ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும் இந்தியர்களின் கருப்புப் பணம் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு இறுதி வரை, இந்தியர்களால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் சாவைத் தன் கையால் தேடிக்கொண்ட கோபக்காரன் வீடியோ

 தன் சாவைத் தன் கையால் தேடிக்கொண்ட கோபக்காரன் கோபக்காரனுக்கு புத்தி மட்டு......? 

2 ஏர் இந்தியா விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம்- விபத்துகள் தவிர்ப்பு

Air Indiaசென்னை: எரிபொருள் கசிவு காரணமாக ஏர் இந்தியா விமானம் சென்னையில் இன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இன்று காலை சென்னையில் இருந்து 106 பயணிகள், 5 சிப்பந்திகளுடன் கொச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் (எண் AI 520) நடுவானில் எரிபொருள் கசிவதை விமானிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடனடியாக சென்னைக்கே விமானத்தைத் திருப்பிய விமானிகள் அதை அவசரமாகத் தரையிறக்கினர்.

பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா துபாய் விமானம்:

அதே போல கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் 148 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் காலை 10 மணிக்கு புறப்பட்டது.

அப்போது விமானத்தின் வலது பக்க என்ஜின் அருகே இறக்கையில் பறவை மோதியது. இதில் என்ஜினின் இரு பிளேடுகள் சேதமடைந்துவிட்டன. இதையடுத்து விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் கடலில் கொட்டப்பட்டு அடுத்த 40 நிமிடங்களில் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அப்துல் நாஸர் மஃதனி:இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!



திருவனந்தபுரம்:பெங்களூர் குண்டுவெடிப்பு 
வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு 
கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில 
பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி 
தனது கண்களின் பார்வை சக்தியை 
இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் 
பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக தொடர்ந்து 3 அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 3-வது அறுவை சிகிட்சை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகர் கண் மருத்துவமனையின் டாக்டர்களான கெ.பூஜங் ஷெட்டி, 
நரேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில் லேஸர் அறுவை சிகிட்சை 
நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சையின் பலனை அறிய காத்திருக்கவேண்டும். 
சர்க்கரை நோய் முற்றிப்போய் கண்ணை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி மூலம் 
கண்களில் இரத்தம் கட்டிப்போய் மஃதனிக்கு பார்க்கும் சக்தி இழக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்கு முன்பு மஃதனியை சிறையில் சந்தித்த அவரது உடன் 
பிறந்தவர்களான முஹம்மது தாஹா, மலீஹா பீவி ஆகியோரை மஃதனியால்
அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமான பிறகும் கர்நாடாகா 
பாசிச பா.ஜ.க அரசும், சிறை அதிகாரிகளும் சிகிட்சை அளிப்பதில் அலட்சியமாக 
இருந்ததால் அவருக்கு பார்வை சக்தி இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் படிப்படியாக அதிகரித்து கண்ணின் பார்வையை பாதிக்க துவங்கிய 
பொழுது மஃதனிக்கு உரிய சிகிட்சை அளிக்காததால் முற்றிய பிறகு அதிகாரிகள் 
கவனித்ததாக மஃதனியின் வழக்கறிஞர் சிராஜ் கூறுகிறார்.
ஜனவரி 13-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் 
செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கர்நாடகா அரசு, அப்துல் 
நாஸர் மஃதனிக்கு எந்த நோய்க்கும், சிகிட்சைகள் அனைத்தும் உரிய நேரத்தில் தேவைக்கு 
ஏற்ப அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. உடல் நிலை சீர்கெட்ட அப்துல் நாஸர் 
மஃதனிக்கு ஜாமீன் மனுவை நிராகரிக்க இந்த பிரமாணப்பத்திரம் காரணமானது.
தொடர்ந்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்
மஃதனிக்கு சிகிட்சையை உறுதிச் செய்யக்கோரி கர்நாடகா முதல்வருக்கு கடிதம் 
எழுதினர். இதனைத் தொடர்ந்து அவர் பதில் கடிதத்தில் சிகிட்சை அளிப்பதாக உறுதி 
அளித்தார். ஆனால், உடல் ஆரோக்கியம் சீர்கெட்ட மஃதனிக்கு கண் பார்வை 
பறிபோனதை தொடர்ந்து சிறைவாழ்க்கை மிகவும் துயரமாக மாறியுள்ளது.
வாசிப்பு, எழுத்து என சிறையில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அப்துல் நாஸர் மஃதனி
 பேசும் சக்தியையும் இழந்து வருகிறார்.
2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அநீதமாக கர்நாடகா 
மாநில பாசிச பா.ஜ.க அரசு கேரள கம்யூனிச அரசின் துணையுடன் 2010 ஆகஸ்ட் மாதம் 
17-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தது.

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: கைதான தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காணவில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.
சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  
சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.
கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகியோரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.
அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.  
அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.
சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுனிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.  
கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு பயிற்சி முகாம்

இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான தீவிரவாத   பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதமாற்றத்தைத் தடுத்திட பண்பாட்டைப் பாதுகாத்திட பயங்கரவாதத்தை முறியடித்திட, இந்து விரோதிகளை வேரறுத்திட, கிராமங்கள் தோறும் இந்து முன்னணி பேரியக்கத்தின் கிளைகளைத் துவக்கி இந்துக்களை ஒன்றுபடுத்திட ,
ஜாதி மோதல்களைத் தடுத்திட, இந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட சுவாமி விவேகானந்தர் கண்ட கனவினை நனவாக்கிட இளைஞர்களுக்கு இந்து முன்னணி ஆண்டுதோறும் பயிற்சி அளித்து வருகிறது" என்றும்
”இவ்வருடப் பயிற்சி முகாம்கள் வேலூரில் நடைபெற இருக்கிறது. முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மாநில இந்து முன்னணி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமா​ன பியானோவை அசத்தலாக இசைக்கும் சிறுவன்


வெஸ்ட் போர்ட் நகரத்தைச் சேர்ந்த ஈதன் வால்மார்க் என்ற ஆறே வயதுடைய சிறுவன் பிரம்மாண்டமான பியானோவைப் பயன்படுத்தி பில்லி ஜால் என்ற கிளாஸிக் இசையை எவ்விதமான பிழையும் இன்றி வாசித்து அசத்துகின்றான்.
அதே நேரம் தனது திறமையைப் பயன்படுத்தி சகோதரிக்கும் சிறந்த முறையில் பியோனோ இசைக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கும் ஈதன் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றான்.


ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் 82 வயது முதியவர்


ஸ்காட்லாந்து Lennoxtown என்ற இடத்தில் வசித்து வரும் 82 வயதான Mr Rodger என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் அசத்தியுள்ளார்.
3 முறை ஜிம்னாஸ்டிக் சாம்பியானாக வலம்வந்த இவர் தனது 20 வயதிலிருந்தே இவ்விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மேலும் இவர் ஜிம்னாஸ்டிக்கில் இன்னும் பலவித விளையாட்டு வித்தைகளையும் கொண்டுள்ளார்.
Mr Rodger தன்னைப் பற்றி கருத்து தெரிவிகையில், தான் 60 ஆண்டு காலமாக இப்பயிற்சியினை மேற்கொண்டதால் இப்பொழுதும் என்னால் நன்கு விளையாட முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.


எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

Sachin Tendulkar டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியா?... கொஞ்சம் பொறுமையா இருங்க-கலாம் பதில்!

Abdul Kalam டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, சற்று பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், பாஜக தலைமையிலான கூட்டணியும் தங்களுக்குச் சாதகமானவர்களை குடியரசுத் தலைவராக்க தீவிரமாக உள்ளன.

ஒவ்வொரு தரப்பும் ஒருவரது பெயரைப் பரிந்துரைத்து ஆதரவு திரட்ட ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் தரப்பி்ல ஹமீத் அன்சாரியின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் ஆட்சேபனை நிலவுகிறது. ஏன், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரினமூல் காங்கிரஸே அதை ஏற்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்குப் பிடித்தவரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சிகள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்தான் அப்துல் கலாம். அவரது காலகட்டம் என்பது குடியரசுத் தலைவர் பதவியின் பொற்காலம் என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக, சுறுசுறுப்பாக, செயல்பட்டவர் கலாம். ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் ஓடி வந்தவர். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அத்தனை பேரும் தடுமாறினர் என்பதே உண்மை.

2007ல் இவரது பதவிக்காலம் முடிந்தபோது மீண்டும் கலாமையே குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமிக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் விரும்பின. ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் அதை விரும்பவில்லை. இதனால் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்கு வர நேரிட்டது.

தற்போது கலாம் பக்கம் பெரும்பாலான கட்சிகள் திரும்பி வருகின்றன. இதனால் காங்கிரஸுக்குப் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. கலாம் மீது காங்கிரஸுக்கு உள்ள ஒரே அதிருப்தி என்னவென்றால், சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்தவர் என்பதே. எனவே கலாமை மீண்டும் தேர்வு செய்ய அக்கட்சிக்கு பெரும் தயக்கம் காணப்படுகிறது.

ஆனால் கலாமையே தேர்வு செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட கட்சிகள் கூற ஆரம்பித்துள்ளதால் அவரே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கலாம் இதுவரை கருத்துக் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், டெல்லியில் அவரை செய்தியாளர்கள் முற்றுகையிட்டு மீண்டும் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு கலாம், சற்றுப் பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள், சொல்கிறேன் என்று மட்டும் கூறினார்.

ஆனால் இவரது இந்த பதிலிலேயே ஏகப்பட்ட பதில்கள் பொதிந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாம் நிச்சயம் போட்டியிடுவார் என்ற ஊகங்களும் வலுக்க ஆரம்பித்துள்ளன.

ராஷ்டிரபதி பவனில் மீண்டும் மக்கள் ஜனாதிபதி குடியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மலேசியாவில் "பெர்சி' பேரணி போலீசார் தடியடி

கோலாலம்பூர்:தேர்தல் சீர்திருத்தம் கோரி, மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பேரணியில், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், தேர்தல் சீர்திருத்தம் கோரி, எதிர்க்கட்சிகள் ஆதரவுடன், "பெர்சி' (மலேய மொழியில், "சுத்தமான' என்று பொருள்) என்ற தன்னார்வ அமைப்பின் தொண்டர்கள், சுதந்திர சதுக்கத்தில் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.




தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் 
என்றும், தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், 
அவர்கள் தெரிவித்தனர்.பேரணிக்கு, நகர நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வேறு 
பகுதிகளில் பேரணி நடத்த, அதன் அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர். 
இந்நிலையில், திட்டமிட்டபடி, நேற்று காலை பேரணி நடத்த, 25 ஆயிரத்திற்கும் 
மேற்பட்டோர், சுதந்திர சதுக்கம் அருகே திரண்டனர். இவர்களில், 
வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் என, பலரும் கலந்து கொண்டனர்.



ஆனால், சில இணையதள செய்திகளில், இந்த எண்ணிக்கை, 80 ஆயிரத்தில் இருந்து ஒரு 
லட்சம் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பேரணி நடத்த தடை 
விதிப்பதிருப்பது குறித்து, போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதை 
அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, பேரணிக்கு வந்தவர்கள் மீது, போலீசார் 
தடியடி நடத்தினர்.இருப்பினும், அவர்கள் அங்கிருந்து கலையாமல் இருந்ததை அடுத்து, 
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், அவர்களை விரட்டி 
அடித்தனர். "பெர்சி' அமைப்பின் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்த 
வழக்கறிஞருமான எஸ்.அம்பிகா, சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில், தொண்டர்களை
 சந்தித்து பேசினார்.



அதேபோல், சில குறிப்பிட்ட பகுதிகளில், பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூடி 
பேசினர். இதையெல்லாம், போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.பேரணியை
 தடுக்க, நேற்று முன்தினமே, மலேசிய அதிகாரிகள் பல முக்கிய பகுதிகளை, "சீல்' 
செய்து விட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி, 20
 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது.