இது குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டதால் அவர்களை பொலிசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிசார், அங்கு தோண்டி பார்த்தபோது மாயமான 2 பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு குடியிருந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த பெண்களை கொலை செய்த நபர்கள் அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு உடலின் மீதமிருந்த பாகத்தை புதைத்தது தெரிய வந்தது. இந்த தகவலை கரான்சன்ஸ் பொலிஸ் கமாண்டர் ஒலிவெரா தெரிவித்தார். பெர்னாம் புகோ நகரில் ஏற்கனவே 6 பெண்கள் மாயமாகி விட்டனர். அவர்களது கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது கடத்தல், கொலை, பிணத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
பிரேசிலில் மனித மாமிசத்தை சாப்பிட்ட மனிதர்கள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail