இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற சேதுவை காவல்துறை உதவி ஆய்வாளர் சித்தன், தலைமைக் காவலர்கள் போஸ் மற்றும் பரமசிவம் ஆகியோர் காவல் நிலையத்திலேயே வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் சேதுவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சேதுவைத் தேடி அவரது மகன் பாலமுருகன் வந்தபோது பாலமுருகனையும் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், மனம் உடைந்த சேது மற்றும் பாலமுருகன் இருவரும் இரவு வீட்டிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் பாலமுருகனைக் காப்பாற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரத்திபனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.