பாலஸ்தீனப் போராட்டக்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நாடாத்திய இஸ்ரேலிய இராணுவ அதிகாரி!


இஸ்ரேலின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் பாலஸ்தீனிய போராட்டக்காரர் மீது கடுமையான முறையில் தாக்குதலைத் தொடுத்தது உலகெங்கும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒரு சர்வதேச சைக்கிளோட்டப் பந்தய வீரர் ஆவார்.

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரரின் முகத்தில் துப்பாக்கியால் மிலேச்சத்தனமாகத் தாக்கியுள்ளார் இஸ்ரேல் இராணுவ அதிகாரி.

குறித்த வீடியோ இணையத்தில் வெளியானதால் அது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

Shalom Eisner என்ற இஸ்ரேலின் மூத்த இராணுவ அதிகாரி தற்போது இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது M-16 ரக துப்பாக்கியை இரு கைகளினாலும் பிடித்தே தாக்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் போராட்டக்காரர்களினால் தூக்கிச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

பாலஸ்தீன வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த நபர் தற்போது நலமாக இருப்பதாக இஸ்ரேலியத் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் இஸ்ரேல் தொலைக்காட்சியான Channel 10 க்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இஸ்ரேல் இராணுவத்தினர் நின்றிருந்த பக்கமாக மெதுவாக நடந்து சென்றோம். நாங்கள் பாலஸ்தீனிய விடுதலைப் பாடல்களைப் பாடியவாறே சென்றோம்.

குறித்த இராணுவ வீரரை இந்தச் செயல் ஆத்திரமூட்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரியான Benjamin Netanyahu உம் இந்தச் செயலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதேபோல இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீதும் சிங்களச் சிப்பாய்கள் இவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: