பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமபாத்தில் உள்ள பிரத்தியேக வீடு ஒன்றில் ஒசாமா மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சிறை வைக்கப்பட்டுள்ள பரபரப்புக் காட்சியை Al Arabiya television network என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.குறித்த வீடியோக் காட்சியில் காட்டப்படுகின்ற முக்கிய செய்திகள் வருமாறு,
அந்த வீடியோவில் காட்டப்படுகின்ற வீட்டில் குழந்தைகள் கரடிப் பொம்மை மற்றும் கிரிக்கட் பேட் ஆகியவற்றுடன் விளையாடுகின்றன. கைது செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனின் மூன்று மனைவிகளும் குரான் வாசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்கள் இருக்கின்ற வீட்டுப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
கடுமையான ஆயுதங்களுடன் பாகிஸ்தானின் இராணுவத்தினரும் போலிஸாரும் வீட்டின் முன் காணப்படுகின்றார்கள்.