ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 7,000 கோடியில் புதிய விமான நிலையம்!

Airport சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 7,000 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று விமான நிலைய ஆணையகத்தின் தலைவர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடிவடைந்து விடும். சென்னை விமான நிலையத்தினை பயன்படுத்தும் பயனாளிகளுக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து பரீசிலித்து வருகிறோம்.

தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் கட்ட நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டும். இதன்பின்னர் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.7,000 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றார் அகர்வால்.

ஸ்ரீபெரும்புதூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு விஷன் 2023 அறிக்கையிலும் இது குறித்து அரசு விளக்கியுள்ளது.

இதன்படி 4,800 ஏக்கரில் இந்த விமான நிலையத்தை அமைத்திடவும், மொத்தம் ரூ. 20,000 கோடி வரை அதில் முதலீடு செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகளை 2020ம் ஆண்டுக்குள் முடித்திடவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய சென்னை விமான நிலையம் 2017-18ம் ஆண்டுக்குப் பின் பயணிகள் நெரிசலை தாங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சென்னை விமான நிலையம் ஆண்டுதோறும் 1.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: