குஜராத், மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் 4.5 ரிக்டர் நிலநடுக்கம்!

Mumbai டெல்லி: இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான மும்பை, குஜராத் மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.5 என இந்த நிலநடுக்கம் பதிவானது.

இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது மேற்குக் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மும்பை நகரம், புறநகர்ப் பகுதிகள், சௌராஷ்ட்ரப் பகுதிகள், குஜராத் மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. புனே மற்றும் கொங்கண கடற்கரைப் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
  Read:  In English 
இந்தப் பகுதிகளில் இருமுறை கட்டிடங்கள் ஆடியடங்கியதாகவும் அதை தான் உணர்ந்ததாகவும் நடிகர் அமிதாப் பச்சன் உடனடியாக ட்வீட் செய்திருந்தார்.

இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளைவிட, மேற்குப் பகுதிகளையே அதிக அளவு பூகம்பம் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தின் லாத்தூர், குஜராத்தில் புஜ் பகுதிகளில் ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்புகள் இன்னும் கூட உள்ளன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: