நாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறைய தூண்டும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்



ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்குள் நான்கு மஸ்ஜிதுகள் வன்முறையாளர்களால் அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அமைதிகாத்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக காவல்துறையினர் கூடுதலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நகரத்திலுள்ள 4 மஸ்ஜிதுகள் அசுத்தப்படுத்தப்படுத்தியுள்ளனர். முதலில் நாராயணகுடா பகுதியிலுள்ள மஸ்ஜிதே அஜீமியாவில் சில மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பன்றியின் இறைச்சியை மஸ்ஜிதின் கூரை மீது வீசிவிட்டு சென்றுள்ளனர். இதே போன்று இரு நாட்களுக்கு முன்பு மஸ்ஜிதே தாகியின் பிரதான வாயிலுக்கு முன்பாக ஃபஜர் தொழுகை நேரத்தின் போது பன்றி இறைச்சியை வீசிவிட்டு சென்றுள்ளனர்.



தாகி மஸ்ஜிதின் மோதினார் கூறும்போது "அதிகாலை 4:45 மணியளவில் ஃபஜர் தொழுகைக்கான பாங்கு சொல்வதற்காக சென்ற போது மஸ்ஜிதின் வராண்டாவில் பன்றியின் தலையும், நுழைவுவாயிலில் அதன் கால் மற்றும் வால்கள் வீசப்பட்டு கிடந்தது. இதனை கேள்விபட்ட காவல்துறையினர் உடனே விரைந்து வந்து அதனை அப்புறப்படுத்தினர். தொழுகைக்கு வந்த அனைவரும் ஒன்று சேர்ந்து மஸ்ஜித் முழுவதையும் கழுவி சுத்தம் செய்த பின்னர் ஃபஜர் தொழுகை நடத்தப்பட்டது." இவ்வாறு அவர் கூறினார்.

மஸ்ஜிதே அருகே இறைச்சி கடை நடத்தி வரும் முஹம்மது ஷாஜித் கூறும் போது தான் அப்பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெற்றதே இல்லை என கூறினார். இச்செய்தி காட்டுத்தீ போல சுற்றபுற இடங்களுக்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட அப்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதை அசுத்தம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காவல்துறையினரோ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம்களை அமைதிப்படுத்தவே முயற்சித்து வருகின்றனர். இந்த செய்தி மேலும் பல இடங்களுக்கு பரவியதால மறு நாளே இது போன்று மேலும் இரண்டு மஸ்ஜிதுகள் மர்ம நபர்களால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. காச்சிகுடா பகுதியில் உள்ள மஸ்ஜிதே நூருல் ஆலம் பள்ளிவாசலில் இதே போன்று பன்றியின் இறைச்சியை வீசியுள்ளனர். பகதுர்புராவிலுள்ள பிலால் மஸ்ஜிதில் ஒரு படி மேலே சென்று செத்துப்போன நாயின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.




நூருல் ஆலம் மஸ்ஜிதின் செயலாளர் கூறும்போது "காலை 11.30 மணியளவில் சில மர்ம நபர்கள்  பன்றியின் பாதி உடலை மஸ்ஜிதின் பின்புற படிக்கட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்புற சுற்றுச்சுவர் வழியாக அவர்கள் ஏறி இருக்க வேண்டும். இப்பகுதியில் முஸ்லிம்களும், இந்துக்களும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் நான் வசித்து வருகிறேன். இதுமாதிரியான வெறுக்கத்தக்க‌ செயல்கள் இதுவரை நடைபெற்றதே இல்லை. மற்ற பகுதியிலிருந்து தான் சிலர் வந்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவே இவ்வாறு செய்திருக்க வேண்டும்" என கூறினார்.


இதுபோன்ற சம்பவங்களால் நகரம் முழுவதும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மாலை நேரத்திலேயே கடைகளை மூடிவிடும்படி வற்புறுத்தி வருகின்றனர். கடுமையான சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துவிடாமல் இருக்க மதன்பேட் மற்றும் சைதாபாத் போன்ற பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.







இருந்தபோதிலும் வன்முறையாளர்களை கைது செய்வதற்கான எந்தவொரு பெரும் முயற்ச்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டதாக தெரியவில்லை. இதனை விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வன்முறை தொடர்பாக 7 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 நபர்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் அப்பகுதி மக்கள் கூறும்போது வன்முறைக்கு காரணம் அங்கு செயல்பட்டு வரும் சில இந்துத்துவ அமைப்பினர் தான் என்பதை திட்டவட்டமாக கூறுகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: