கல்லூரி மாணவர் அடித்து கொலை

வேலூர்: ஆற்காடு அடுத்த தாழனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் விஜயராகவன் (19). இவர் ஆற்காடு அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் (ஜன.,8) முனியாண்டியும், அவரது மனைவி அமராவதியும் திருப்பதிக்கு சென்றனர். இவர்களை கண்ணமங்கலம் கூட்டு ரோட்டில் பஸ் ஏற்றி விட்டு விஜயராகவன் வீட்டுக்கு திரும்பினார். நேற்று (ஜன.,9 ) காலை 8 மணிக்கு முனியாண்டி ஊர் திரும்பிய போது, அவரை அழைத்து செல்ல விஜயராகவன் வரவில்லை. அவரது மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்ட போது பதில் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த முனியாண்டி தன் உறவினர்களை அழைத்து கொண்டு தேடிய போது, கிருஷ்ணாவரம் பெரியாண்டவர் கோவில் பின் புறம் உள்ள கிணற்றில் விஜயராகவன் பிணம் மிதந்தது தெரிந்தது.

ஆற்காடு டவுன் போலீஸார் விஜயராகவன் பிணத்தை மீட்டனர். பிரேத பரிசோதனையில் விஜயராகவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி முனியாண்டி உறவினர்களுடன் ஆற்காடு அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸார் உறுதி மொழி அளித்ததன் பேரில் சற்று நேரத்தில் கலைந்து சென்றனர்.

dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: