தேவக்கோட்டையில் 5 லட்சம் வழிப்பறி

தேவக்கோட்டை: தேவக்கோட்டையில் மீண்டும் மதியம் 5 லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூர் அடுத்த விஸ்வனூர் பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன்(42). இவர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள முக்கிய பிரமுகரிடம் நான்கு லட்சத்து 92 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு பலருக்கு ஹவாலா மூலம் விநியோகம் செய்வதற்காக வாங்கி வந்தார். வழியில் தேவக்கோட்டை அருகே நல்லாங்குடி சென்ற போது மர்ம கும்பல், சிராஜூதினிடமிருந்து செல்போன், பைக், தனியாக வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய், நான்கு லட்சத்து 92 ஆயிரம் ரூபாயை பறித்து சென்று தப்பியோடினர். சம்பவம் குறித்து தேவக்கோட்டி ஏஎஸ்பி சமந்த் ரோஹன் ராஜேந்திரா விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த வழிப்பறி சம்பவம் இரண்டாவது என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று தேவக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: