முஸ்லிம் இட ஒதுக்கீடு விவகாரம் சூடு பிடிக்கிறது - உ .பி., தேர்தல் சூழலில் சிக்கிய சல்மான் குர்ஷித்


லக்னோ: உத்ரபிரதேச மாநிலம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பாக இவர் கொடுத்த வாக்குறுதி இப்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடிய அளவிற்கு திரும்பியிருக்கிறது.
உ .பி., பஞ்சாப், மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை உ .பி.,யில் பரிக்காபாத் தொகுதியில் சட்ட அமைச்சர் குர்ஷீத் மனைவி லூயிஸ்குர்ஷீத் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாõக பேசிய அமைச்சர் முஸ்லிம்களுக்கு 6 முதல் 9 சதவீதம் வரை இட ஓதுக்கீடு கிடைக்க ஆவன செய்வோம் என்றார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தேர்தல் சட்ட விதிமுறைக்கு எதிரானது என்றும், இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் பா.ஜ., தேர்தல் கமிஷனிடம் புகார் செய்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ., செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்: காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் ஒரு குறிப்பிட்டவர்களது ஓட்டுக்களை பெற்று அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறது என்றார். இதனால் சட்ட அமைச்சருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: