இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

புதுடில்லி: போலியாவை ஒழிப்பதற்கு இந்தியாவை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் இந்தியாவில் ஒருவர் கூட போலியோ நோயினால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். இது மருத்துவத்துறையில்மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். இது குறித்து பில்கேட்ஸ் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போலியா நோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துநேரில் அறிந்தேன். கடந்த 2009 ஆண்டுஉலகில் போலியோ நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமையுடன் முடியும் ஓராண்டு காலத்தில் ஒருவர் கூட போலியோ நோய் பாதித்ததாக யாரும் கண்டறியப்படவில்லை. இது மிகப்பெரும் சாதனை என கூறியுள்ளார். இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளார். போலியோவை ஒழிக்க இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 20 லட்ச தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். 8 லட்ச போலியோ நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் 17.20 கோடி இந்திய குழந்தைகள் பயன்பெற்றனர் என்று கூறியுள்ள பில்கேட்ஸ், உலக அளவில் போலியோ நோய்க்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் போலியோவை ஒழிக்க அதிக நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: