வீசியது கறுப்பு : வாயில் வந்தது சிவப்பு : யோகாகுரு மீது கறுப்பு மை வீசியதால் பரபரப்பு

  புதுடில்லி: ஊழல் மற்றும் கறுப்பு பண விவகாரம் தொடர்பான பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் யோகாகுரு பாபா ராம்தேவ் மீது ஒருவர் கையில் இருந்த கறுப்பு மையை வீசினார். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பெரும் பரபரப்பு நிலவியது.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவேண்டும் என டில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். இவரை போலீசாரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர். இந்நேரத்தில் எழுந்த சலசலப்பினால் தடியடியும் நடத்தப்பட்டது. இதனையடுத்து ராம்தேவ் மீதும் அவரது உதவியாளர் மீதும் பல கிரிமினல் வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். இதில் சற்று ஒதுங்கியிருந்த பாபா ராம்தேவ் மீது இன்று கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. 

டில்லியில் நிருபர்கள் சந்திப்பின்போது வந்த ஒருவர் கையில் தயாராக வைத்திருந்த கறுப்பு இங்கை அவரது முகம் மற்றும் மார்பு பகுதியில் தெளித்தார். இந்த நபரை உடனடியாக அங்கு சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் யார் என்ன காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவனது பெயர் கம்ரான் சித்திக் என்றும் , டில்லியை சேர்ந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

இந்த சம்பவத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ராம்தேவ்: இந்த அளவிற்கு கறுப்பு மையை ஊற்றும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என்றார். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து இருக்கும் என்றார்.

டில்லியில் அரசியல்வாதிகள், முக்கியப்பிரமுகர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்னா ஹசாரே குழுவில் உள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாக்குதல், மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு கன்னத்தில் பளர், ப. சிதம்பரம் மீது ஷூ வீச்சு என தற்போது இது 4 வது சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்ற தாக்குதலை தடுக்க டில்லி போலீசார் முடியாமல் இருக்கின்றனரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அரசியல் கட்சியினர் கண்டனம் : இந்த சம்பவம் குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், தற்போது தாக்குதல் நடத்துவது சாதாரணமாகி வருகிறது. சாதாரண மக்கள் பிரபலமடைய இதுபோன்று தாக்குதல் நடத்துகின்றனர். அரசு இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாந்த் பூஷண், சரத் பவார் மீது கடந்த ஆண்டுகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு ராம்லீலா மைதானத்தில் ராம் தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் லத்தியால் அடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை பயங்கரவாதிகள் போல்நடத்தினர். இதற்கு பின்னணியில் மத்திய அரசு உள்ளது என்றார்.

ராம்தேவ் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ரஷீத் ஆல்வி கூறுகையில்,நடந்த சம்பவங்கள் எதிர்பாராதது. தங்களது கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. யாராவதுதவறு செய்தால் நான் கண்டனம் தெரிவிப்பேன். ராம் தேவ் மீதான தாக்குதல் குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: