பைக் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ள தனது கேடிஎம் டியூக் 200 ஆப்ரோடர் பைக்கை வரும் 24ந் தேதி டெல்லியில் அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.டெல்லி ஆட்டோ கண்காட்சியிலேயே கேடிஎம் டியூக் ஆப்ரோடு பைக் மற்றும் புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது மினி காரை அறிமுகம் செய்து பைக்குகள் மீதான எதிர்பார்ப்பை அந்த நிறுவனம் குறைத்தது.
இந்த நிலையில், வரும் 24ந் தேதி கேடிஎம் டியூக் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் தயாரிக்கும் இந்த பைக்குகள் ஆப்ரோடு சாகசங்களில் புகழ்பெற்றவை.
இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் 40 சதவீத பங்ககுள் தற்போது பஜாஜ் வசம் இருக்கிறது. எனவே, தனது துணை நிறுவனமான கேடிஎம் பிராண்டை ட்யூக் 200 பைக் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் ஆட்டோ.
கேடிஎம் டியூக் 200 பைக்கில் 199.6 சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 25.47 பிஎம்சபி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.4 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.drivespark