விமானிகள் தூக்கம் : மும்பை விமானம் கோவா சென்றது!

 மும்பை : 100 பயணிகளுடன் துபாயிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு விமானிகளும் தூங்கிவிட்டதால், விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின்னர் தற்போது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னர், துபாயிலிருந்து 100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. பின்னர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு  விமானி தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை  விமானியும் தூங்கிவிட்டார். மும்பை விமான கட்டுப்பாட்டு நிலையம் ஷிணிலிசிகிலி முறையைப் பயன்படுத்தி விமானத்தைத் தொடர்பு கொண்டதும் காக்பிட்டிலுள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர். இவ்வளவும் நடக்கும் முன்னர் விமானம் மும்பை வான்வெளியைத் தாண்டி கோவாவுக்குப் பாதி தூரம் வரை போய்விட்டது. இதையடுத்தபிரு விமானிகளும் விமானத்தை திருப்பி மும்பையில் தரையிறக்கினர்.
dinakaran
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: