பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்




பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்























தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று சுமார் 16 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் அவசர சிசிக்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டுவந்ததால், புற நோயாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.


தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் சேதுலட்சுமி. இவர் கடந்த 2ஆம் தேதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட குழந்தைகள், மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாக்குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கன்னியாக்குமரி, பூதபாண்டி, தக்கலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அந்த மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகள், 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 500 மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
nakkheeran.in


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: