லண்டனுக்கு சென்றனர் பித்வேயின் பெற்றோர்

 லண்டன்: பிரிட்டனில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் அனுஜ் பித்வேயின் பெற்றோர், அவரது உடலை பெறுவதற்காக நேற்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பிரிட்டனில் கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி, கியரன் ஸ்டேப்லெடான், 20, என்பவரால், இந்திய மாணவர் அனுஜ் பித்வே, 23, சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், பித்வேயின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, அவரது தந்தை சுபாஷ் பித்வே, தாயார் யோகினி பித்வே மற்றும் உறவினர் ராகேஷ் சோனாவானே ஆகியோர் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றனர். லண்டனில் இருந்து பின் மான்செஸ்டர் செல்கின்றனர். இதற்கிடையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம், பித்வேயின் உடல் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின், நேற்று அவரது உடல், இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்நிறுவனம், பித்வேயின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். இவ்வாரத்தின் இறுதியில் அனுஜ் பித்வேயின் இறுதிச் சடங்குகள் புனேயில் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
dinamala
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: