முதல் இன்னிங்ஸிலேயே பேட்டிங்கில் நாம் சொதப்பி விட்டோம்-டோணி

Dhoni சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே நாம் சரிவடைந்து விட்டோம். அதில் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டோணி கூறுகையில்,
பேட்டிங்கிற்கு சிறந்த ஆடுகளமான இங்கு கிளார்க் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்கள் கையில் இருந்ததாலும், பான்டிங் மற்றும் ஹஸ்ஸியின் பங்களிப்புடனும் கிளார்க் ஆட்டத்தை தொடர்ந்தார்.

3வது டெஸ்ட் போட்டியில் உறுதியாக இந்தியா வெற்றிப் பெறும். சிட்னியில் அமைந்தது போன்ற பேட்டிங் சரிவு இல்லாமல், வெற்றியை முன் நிறுத்தி 3வது டெஸ்ட் போட்டியில் ஆடுவோம், என்றார்.

tamil
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: