மனைவி, மகளைக் கழுத்தை அறுத்துக் கொன்ற தனியார் நிறுவன ஊழியர்

சென்னை: பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்துவிட்டு அவர்களைப் பற்றி குறை கூறி வந்த மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த முத்து மதினா சாலையைச் சேர்ந்தவர் முத்து மாணிக்கம் (58). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு நாகவள்ளி (55) என்ற மனைவியும், ராஜேஸ்வரி (30) என்ற மகளும் இருந்தனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த நாகவள்ளியும், ராஜேஸ்வரியும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தகராறு குறித்து 2 பேரும் முத்து மாணிக்கத்திடம் கூறி வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் தவித்த அவர் வெளியூரில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

மனைவி, மகளின் தொல்லை தாங்க முடியாமல் கோவில்களுக்கு சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு முத்து மாணிக்கம் வீடு திரும்பினார். அப்போது வழக்கம் போல தாயும், மகளும் பக்கத்து வீட்டு தகராறு குறித்து அவரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கடப்பாரையைக் கொண்டு மனைவி மற்றும் மகளின் தலையில் அடித்தார்.

இதில் படுகாயமடைந்த 2 பேரும் மயங்கி விழுந்தனர். அப்போது 2 பேரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தார். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாருக்கும், உறவினருக்கும் போனில் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் முத்து மாணிக்கத்திடம் விசாரித்து வருகின்றனர்.

tamil
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: