சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆடிய ஆஸி., 659 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடவில் இந்தியா இந்த டெஸ்ட்டில் 468 ரன் பின்னடைந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.ஆஸ்திரேலியாவில் நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. 2 வது போட்டியில் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் துவங்கிய இந்தியா , அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. ஆஸி., முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்திருந்தது. 2 வது நாளில் ஆஸி., 4 விக்கெட்டுகளை இழந்து 482 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3 வது நாளில் ஆஸி., 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸி., தற்போது இந்தியாவை விட 468 ரன்கள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆக இந்த ரன்களை இந்தியா எட்டுமா என்பது எட்டாத கனியாகவே இருக்கும். இந்த டெஸ்ட்டிலும் இந்தியாவுக்கு தோல்வி முகமே இருந்து வருகிறது.
ஆஸி., அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் ( 329 அவுட்டாகவில்லை) எடுத்தார். கிளார்க் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற பட்டியலில் 4 வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மிக்கேல் ஹசி ஒன்றரை சதம் ( 150 அவுட்டாகவில்லை), ரிக்கிபாண்டிங் (134 ). ரன்கள் எடுத்தனர். தற்போது 2 வது இன்னிங்ஸ் ஆடத்துவங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து, 354 ரன்கள் பின்தங்கியுள்ளது. காம்பிர் 68 ரன்களும், சச்சின் 8 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
விராட் கோஹ்லிக்கு அபராதம்: இந்த டெஸ்டின் போது ரசிகர்களை நோக்கி அநாகரிகமாக சைகை செய்ததாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லிக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
dinamalar