புதுடில்லி: லோக்பால் விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பார்லி.,யில் நாடகம் நடத்தி மசோதா நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது என்றும் இந்த விஷயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மகஜர் ஒன்றை பா.,ஜ., எம்.பி.,க்கள் குழுவினர் இன்று பிரதீபா பாட்டிலிடம் வழங்கினர். கடந்த மாதத்தில் நடந்த பார்லி., கூட்டத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தி பேசினர். எதிர்கட்சியினரின் அமளியால் குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியவில்லை தொடர்ந்து மசோதா நிறைவேற்றுவதற்கென மத்திய அரசு கூடுதலாக 3 நாள் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதன்படி நடந்த கூட்டத்தில் , விவாதத்தின்மீது மசோதா அம்சங்களை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பேசினர். லோக்சபாவில் எதிர்கட்சியினர் எதிர்த்து ஓட்டளித்தனர். ராஜ்யசபாவிலும் நிறைவேற்ற முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த குழப்ப நிலை நீடிப்பதால் ஜனாதிபதி தலையிட வேண்டும் என பா.ஜ.,வினர் இன்று மனு கொடுத்தனர். ஜனாதிபதியை பார்க்க சென்ற இந்த பா.ஜ., குழுவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, எதிர்கட்சி நிதின்கட்காரி, தலைவர் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கைய்ய நாயுடு உள்பட பலர் சென்றனர்.
பா.ஜ., அளித்துள்ள மனுவில், காங்கிரஸ் கட்சி லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. என்றும் ,இரவு வரை நடந்த ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்ற ஒட்டெடுப்பு நடத்தாமல் ஏமாற்றி விட்டது . இந்த சபையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் ஜனநாயக படுகொலை செய்து விட்டது என்றும், மீண்டும் பார்லி.,யை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
dinamalar