
கரூர்: "கரூர் தி.மு.க., இளைஞரணியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.கரூர் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ராஜேந்திரன் அறிக்கை:கட்சியின் பொருளார் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இளைஞரணியில் புதிதாக அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களிடத்தில் இளைஞரணி விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.அனைத்து பகுதிகளிலும் கழகம் மீது ஆர்வம் கொண்ட 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களிடத்திலோ அல்லது மாவட்ட தி.மு.க., அலுவலகமான கரூர் கலைஞர் அறிவாலயத்திலோ விண்ணப்ப படிவத்தை பெற்று, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள சான்றுகளை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட செயலாளர்களிடம் வழங்க வேண்டும்.வரும் 28ம் தேதி மாலை 4 மணிக்கு கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பம் அளித்த அனைத்து இளைஞர்களிடமும் நேர்காணல் நடத்தி நியமனம் செய்ய உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.