இதில் ஹேர்ப்பின் முதல் சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரம் வரை கடலில் மீட்டு எடுக்கப்பட்ட 5000 வகையான பொருட்கள் ஏலத்திற்கு வருகின்றன. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகப்புகழ்பெற்ற டைட்டானிக் பயணிகள் கப்பல், அமெரி்க்காவின் வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த கப்பலில் பயணித்த 2228 பேர்களில் 1800-க்கும் மேற்பட்டோர் கடலில் முழ்கி பலியாயினர். கடலில் முழகி விபத்திற்குள்ளான டைட்டானிக் கப்பல் கடந்த 1984-ம் ஆண்டு கனடாவின் நியூபவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் 4 கி.மீ ஆழத்தில் முழ்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் தனியார் நிறுவனம் ஒன்று 1987, 1993, 1994, 1996, 1998, 2000 , 2004 ஆகிய ஆண்டுகளில் கப்பலில் எஞ்சிய பொருட்களை சேகரித்து வந்தது. ![]() ![]() ![]() ![]() இந்நிலையில் டைட்டானிக் கப்பல் முழ்கியதன் 100-ம் ஆண்டு தினத்தையொட்டி, நியூயார்க்கைச் சேர்ந்த கர்ன்ஷே என்ற ஏல நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி ஏலம் விட முடிவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் ஹேர்ப்பின் முதல் பெரிய பொருட்கள் என 5000 வகையான பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
டைட்டானிக் கப்பல் மூழ்கி 100வது ஆண்டு: பொருட்களை ஏலம் விட முடிவு
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail









