டோக்கியோ : ஜப்பானின் தென் பகுதியில் கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில்7 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜப்பானின் தென் பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத தீவான டொரிஷிமோ அருகில் கடலில், நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தீவு, தலைநகர் டோக்கியோவில் இருந்து 600 கி.மீ., தென்பகுதியில் உள்ளது.
நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. எனினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஜப்பானின் மத்திய மற்றும் வடபகுதியில் இயங்கிய விரைவு ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டன. எனினும் சிறிது நேரத்திற்குப் பின் இயங்கத் துவங்கின.