இந்தியாவில் 2011ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் 1291 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். கற்பழிப்புக்குள்ளான பெண்களில் பெரும்பாலானவர்கள் கால்சென்டர்களில் பணிபுரியும் பெண்களும், கிராமத்து பெண்களும்தான். இதுபற்றி ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. தினேஷ்ரெட்டி கூறியதாவது:
பெண்கள் சமீபகாலமாக நாகரீகம் என்ற பெயரில் உடலை காட்டும் வகையில் ஆபாசமாக உடை அணிகிறார்கள். கால் சென்டர்களில் பணிபுரியும் பெண்கள், தங்கள் உடலை எந்த அளவுக்கு மூடி மறைக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிராமத்து பெண்களிடம் சல்வார் கமீஸ் அணிவது அதிகரித்து விட்டது. இதுதான் ஆண்களின் மனதில் ஆசையைத் தூண்டி கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நடக்க காரணமாகி விட்டது. இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. தினேஷ்ரெட்டி கூறினார்.
போலீஸ் அதிகாரியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பியபடி சுதந்திரமாக உடை அணிய உரிமை உண்டு. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் பெண்கள் உடை பற்றி கருத்து கூறி இருப்பது எதிர்பாராதது. ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஆந்திர மாநில உள்துறை மந்திரி சபீதாரெட்டி கூறுகையில், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை டி.ஜி.பி.யோ, நானோ, அரசோ தீர்மானிக்க முடியாது. கற்பழிப்பு குற்றங்கள் நடக்க பல காரணங்கள் உள்ளன. நாம் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

nakkheeran.in