இருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீசாரை ஏன் கைது செய்யவில்லை?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜன.4:  திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் 5 பேரை இதுவரை கைது செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சட்டத்திற்கு புறம்பாக பெண்களை காவலில் வைத்தது தவறு என அரசே ஒப்புக் கொண்ட பின்னரும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது சரியல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட போலீசார் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்தார். மேலும் போலீஸ் மீதான விசாரணையை முடிக்க அரசு தரப்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது.  இதை ஏற்ற நீதிமன்றம்  வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
dinamani
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: