சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வில்லை : நாஞ்சில்சம்பத் பேச்சு

 நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்நகரில் ம.தி.மு.க வின் இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது.   இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை விளக்க அணித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சில் அனல் வீச்சு வெப்பத்தைக் கிளப்பியது

     அவர்,   ’’ 100சதவிகிதம் பஸ் கட்டண உயர்வு சுமை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.   பிரச்சிணைகளைத் திசைதிருப்பவே சசிகலா விவகாரம் நடந்து வருகிறது. அப்படி என்றால் அவர்கள் மீது ஜெயலலிதா ஏன் விசாரணைக கமிசன் வைக்க வில்லை.
ஆய்ந்து அறிந்த பின்பு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனேயே சமச்சீர்கல்விக்கு சமாதிகட்டிவிட்டீர்கள்.    ஓதாமல் ஓரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் நாட்டில், நீங்கள் இரண்டரை மாதம் ஓதவிடவில்லை.


        சமச்சீர் பாட புத்தகத்தில் வள்ளுவர் படத்தை பச்சை அட்டை ஒட்டி மறைத்தீர்களே வள்ளுவர் என்ன தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரா? அவர் என்ன குற்றம் செய்தார் உங்களுக்கு.

        கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனை செம்மொழி நூலகம் .   அந்த நூலகத்தை மூட நினைப்பது 4 சிறைச்சாலைகளை திறப்பதற்குச்சமம்.  

தமிழ் நாட்டு நிதி நிலைமை பற்றாக்குறை என்கிறார். ஒருபற்றாக்குறை நாடு என்றால் அந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று ஒரு முதலமைச்சர் யோசிக்க வேண்டும்.    பற்றாக்குறை இருந்தால் ஒரு நாடு வளம்பெறாது நான் யாசித்துக் கேட்கிறேன்.  

இந்த இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வை வேற்றி பெறச்செய்யுங்கள். சங்கரன்கோவில் தொகுதிக்கு ஒரு மரியாதை கிடைக்கும்.  இந்த அரசாங்கத்தை உரசிப்பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்’’ என்று பேசினார்.
nakkheeran.in
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: