அமெரிக்காவில் 2வது ஆண்டாக ஆயிரக்கணக்கில் பறவைகள் இறந்ததால் மக்கள் அதிர்ச்சி



அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பிளாக்பேர்ட் வானில் இருந்து செத்து விழுந்தன. இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து அதே தினத்தில் இதுபோல் நடந்தது மர்மமாக உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வாணவேடிக்கைகள் நடத்தி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
 ஆனால் அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் மட்டும் மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில், பிளாக்பேர்ட் எனப்படும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வானில் இருந்து கொத்து கொத்தாக செத்து விழுந்தன.
ஆர்கான்சாஸ் மாகாணத்தின் பீபி நகரில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போதுதான் ஆயிரக்கணக்கான பறவைகள் ஆங்காங்கே செத்து விழுந்தன. இது முதல் முறை என்றால் பரவாயில்லை. கடந்த 2010 டிசம்பர் 31ம் திகதி இரவும் இதேபோல் 4,000 பிளாக்பேர்ட் பறவைகள் செத்து விழுந்தன.
அதனால் மக்கள் பரபரப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பறவைகள் திடீரென செத்து விழுந்ததற்கு இதுவரை சரியான காரணம் தெரியவில்லை. எனினும், அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பது, வெடிபொருட்களில் இருந்து வெளியாகும் நச்சுபுகை போன்றவற்றால் பறவைகள் இறந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: