பொங்கல்: பஸ்களில் அதிக கட்டணம் கேட்டால் 044 - 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம்-அரசு

 சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார்.

தமிழகத்தில் பொஙகல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இது போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல தனியார் பேருந்துகள் பயண கட்டணத்தை தாறுமாறக உயர்த்தி வசூலிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது.

இதேபோல அரசு சார்பில் சிறப்பு பேருந்து என்ற பெயரில் இயக்கப்படும் பேருந்துகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது. இது போன்ற குற்ற சம்பவங்கள் வரும் பெங்கல் பண்டிகையின் போது நிச்சயம் தவிர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகதில் உள்ள தொலைபேசி எண் 044 - 24794709 என்ற எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: