வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

டெல்லி: மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக அழைப்பு வந்ததையடுத்து அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானமான ஏர்பஸ் ஏ-319 117 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் இன்று காலை 7 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. அது புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா கால் சென்டருக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் இருந்தவர் விமானத்தில் உள்ள ஒரு லக்கேஜில் குண்டு இருப்பதாக தெரிவித்துவிட்டது இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து அந்த விமானத்தை உடனே தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் விமானம் டெல்லியை அடைந்துவிட்டதால் அங்குள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.57 மணிக்கு தரையிறக்கப்பட்டது. உடனே அந்த விமானத்தை பயணிகளுடன் தனிவான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து காலை 9.15 மணிக்கு பயணிகளை இறக்கிவிட்ட பிறகு விமானம் சோதனையிடப்பட்டது. ஆனால் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டும் என்றே பொய்யான தகவலை கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: