ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி!

Diana Ghost லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது அதில் தேவாலயக் கண்ணாடி ஒன்றில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.

உடனே அந்த வீடியோவை ஆவிகள் குறித்து ஆய்வு செய்யும் எழுத்தாளர் மைக்கேல் கோஹனுக்கு அனுப்பி வைத்தனர். தான் பார்த்ததிலேயே இது தான் மிகவும் தெளிவான ஆவி உருவம் என்று மைக்கேல் தெரிவித்துள்ளார். ஆவிகள் தங்கள் வாழ்வில் மிகவும் பரிட்சயமான இடங்களில் தான் தோன்றும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை மைக்கேலும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

டயானாவின் தாயார் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஸ்காட்லாந்தில் தான் கழித்தார். கடந்த 2004ம் ஆண்டு அவர் ஸ்காட்லாந்தில் தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: