அமைச்சரின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை ஐ.நா. பிரதிநிதி

Chandula Rambukwella கொழும்பு: இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர துணைப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து ரம்புகவெல்லாவிடம் மன்னிப்பு கோருமாறு, ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநியின் அலுவலகம் நியூயார்க்கில் உள்ளது. இங்கு ரம்புகவெல்லாவின் மகள் சந்துலா பணியாற்றி வருகிறார். இங்குள்ள துணைப் பிரதிதியான ஷவேந்திர சில்வா, சந்துலாவிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

சில்வா தனது அலுவலக அறைக்குள் தன்னை இழுத்துச் சென்று தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அவரிடம் சண்டையிட்டு, ஒருவழியாக வெளியே தப்பி வந்ததாகவும், சந்துலா புகார் கூறியுள்ளார்.

இது குறித்து ராஜபக்சேவிடம் ரம்புகவெல்லா புகார் கூறியதையடுத்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், சில்வா தவறாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து, ரம்புகவெல்லாவிடம் மன்னிப்பு கோருமாறு அவருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அதே நேரத்தில் சந்துலாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும் ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியதாகத் தெரிகிறது.

ரம்புகவெல்லா மீதும் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று, அவருக்கும் ஒரு டிவி நடிகைக்கும் உள்ள தொடர்பாகும். மேலும் ரம்புகவெல்லாவின் மகன் லண்டனில் ஒரு ரஷ்ய விபச்சாரப் பெண்ணுடன் பிடிபட்ட விவகாரமும் சில காலத்துக்கு முன் வெளியே தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டதோடு சில்வாவை ராஜபக்சே விட்டுவிடக் கூடும் என்று தெரிகிறது. இலங்கையின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி, இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதாக்க வேண்டாம் என்று ரம்புகவெல்லாவிடம் ராஜபக்சே கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இலங்கையில் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது நடந்த இனப் படுகொலைகளில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் பெரும் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரைக் காக்க ராஜபக்சே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: