பாக்தாத்: ஈராக்கில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 77 பேர் உயிரிழந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஷியா பிரிவினர் அதிக அளவு வசிக்கும் காதிமியா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். அதுபோல் அர்பாசீன் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். இதனால் ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலால், மொத்தம் 77 பேர் பலியாகி உள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தற்கொலை படை தாக்குதல் காரணமாக ஈராக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தற்கொலை படை தாக்குதலால், ஈராக்கில் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
dinakaran