விசா காலத்திற்குப் பின்னும் தங்கிய இந்தியர்கள் நாடு திரும்ப சவுதி இந்தியத் தூதரகம் ஏற்பாடு

See full size image See full size image துபாய் : ஹஜ் யாத்திரை மற்றும் சுற்றுலாவிற்காக சவுதி அரேபியாவிற்குச் சென்று, அதற்கான காலம் முடிந்த பின்னரும், அங்கேயே தங்கிவிட்ட ஆயிரக்கணக்கானோரை, தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியில், இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதர் எஸ்.டி.மூர்த்தி கூறியதாவது: சவுதி அரேபியாவில், ஹஜ் மற்றும் சுற்றுலாவிற்கு வந்து, காலம் கடந்த பின்னரும் தங்கியிருப்போர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். இவர்களை தாய் நாடு திருப்பி அனுப்பும் பணியில், இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. அதனால், அவ்வாறு சவுதியில் தங்கியிருப்போர், உரிய காலகட்டத்திற்குள், தூதரகத்தை அணுகி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, 200 "அவுட்பாஸ்'கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மூர்த்தி தெரிவித்தார்.
விசாவுக்கான காலம் கடந்த பின்னரும் தங்கியிருந்த அனைவருக்கும், சவுதி அரசு பொது மன்னிப்பு அளித்துள்ளது. இவர்கள், 2010 செப்டம்பர் முதல் 2011 செப்டம்பர் வரையிலான கால கட்டத்திற்குள், தாய் நாடு திரும்ப வேண்டும் என, கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பொது மன்னிப்புக் காலத்தில், 15 ஆயிரம் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சவுதியில், விசா காலத்திற்கு பிறகும் தங்கியிருப்போருக்காக, ஜெட்டாவில் ஒரு அலுவலகத்தை அரசு அமைத்துள்ளது. அங்கு, அவர்கள் தத்தம் நாட்டு அதிகாரிகளை அணுகி, விசாவிற்காக விண்ணப்பிக்கலாம்.

செல்வச் செழிப்பான ஜப்பானில் சுருங்கி வருகிறது மக்கள் தொகை

 டோக்கியோ: ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே சூழல் தொடர்ந்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும். <உ<லகில், ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம். 2010 கணக்கெடுப்பின்படி, அங்கு சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகள். இது, 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால், அதில் ஈடுபடுவதில்லை. அதோடு, கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.
சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள், குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை.

“அஜ்மல் கசாப்புக்கு அநீதி இழைக்கப்பட்டதாம் ” - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சொல்கிறார்

 புதுடில்லி: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் அவருக்கென நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் ராஜூராமச்சந்திரன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். நீதிபதி அப்தாப் ஆலம் முன்பு நடந்த விசாரணையின்போது அவரது வக்கீல் வாதிடுகையில்: அஜ்மல் கசாப் மீது தேத்திற்கு எதிரான சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த குற்றத்தில் கசாப்புக்கு பங்கு எதுவும் இல்லை. கசாப் கொலைக்குற்றவாளியாக கருதினாலும் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபட்டார் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் எதிர்த்து வாதிட முழு உரிமை உண்டு என்றும் கூறினார்.

கசாப்பை பொறுத்தவரை மும்பை ஐகோர்ட் அவருக்கு மரணதண்டனையை கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21 ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 5 முறை தூக்கிலிடும்படி கடும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2008 நவம்பர் மாதம்மும்பை தாக்குதலில் 26 ல் நடந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

அழகான தோற்றத்திலும், நடனத்திலும் காணப்படும் வெள்ளைமயில் (படங்கள்)



பொதுவாக மயில்கள் அழகாகவும், காண்பவர்களின் கண்களைக் கவர்ந்தும் காணப்படும். இவற்றில் ஆண்மயில்கள் தன்னுடைய ஆடம்பரமான தோகையை விரித்து ஆடுவதைக் காணும் பொழுது அவற்றின் அழகு மேலும் அதிகமாகின்றன.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் கண் வடிவங்கள் உள்ளன.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
இவற்றையும் கடந்து வெள்ளைமயில் காணப்படுகின்றன. இவற்றைக் கண்டால் நல்ல அதிஷ்டம் என்பது பெரியோர்களின் கருத்து. அவ்வாறு காணப்படும் அதிஷ்டத்தினைத் தரும் வெள்ளைமயிலின் படத்தினைப் படத்தில் காணலாம்.

சிற்பக்கலை​யின் உச்சத்தை தொட்ட பனிக்கட்டி சிற்ப திருவிழா (வீடியோ)



பிறெக்ன்றிச் இன் கொலோறடோவில் ஆண்டு தோறும் நடைபெறும் பனிக்கட்டி சிற்ப திருவிழாவில் வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் அனைத்தும் மிகவும் தத்துரூபமாகவும், சிற்பக்கலையின் அதிநுட்பத்தை எடுத்துக்காட்டும் வண்ணமாகவும் காணப்பட்டன.
மேலும் 21 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 15 குழுக்கள் பங்கு பெற்றதுடன் ஒவ்வொரு குழுவும் தன் திறமையினை வெளிப்படுத்த 5 சிற்பங்களை செதுக்கியிருந்தன.
இந்த வருடத்திற்கான போட்டியில் கனடா, ஸ்பெயின், சீனா, பின்லாந்து, ஜேர்மனி, லட்வியா, ஏஸ்ரோனியா, சுவிஸ்லாந்து, அலஸ்கா, கொலோறடா, இடாகோ, விஸ்கொன்சின், மெக்சிக்கோ, கிரீஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.

3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் காணப்படும் குழந்தை கரு



சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் அடிப்படையில் ஆய்வுசெய்தால், இரட்டை குழந்தை கருக்குள் தாயின் வயிற்றில் உருவாகி அதில் ஒன்று சரியாக வளர்ச்சி பெற்று குழந்தையாக மாறியதும், மற்றொரு கரு அதனுள் ஊடுருவி வளர்ச்சி பெறாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரைவில் சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை அகற்ற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதயத்தைப் பதறவைக்கும் புகைப்படங்கள் (படங்கள்)



பொதுவாக ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு விதத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதுபோலவே புகைப்பட கலைஞர்களும் தாம் வித்தியாசமாக புகைப்படங்களை எடுப்பதற்காக காடு, மேடு என்றெல்லாம் அலைவதுண்டு.
ஆனால் இங்கு ஒருவர் பூமியிலிருந்து மிகவும் உயரமான இடங்களிலிருந்து புகைப்படங்களை எடுத்து சாதித்திருக்கின்றார். கனடா ரொறன்ரோவை சேர்ந்த ரொம் றியாபோயி என்ற 27 வயதுடைய இளைஞனே இந்த புகைப்படங்களை பயமின்றி எடுத்திருக்கிறார். மேலும் இப்புகைப்படம் எடுப்பதற்காக ஏறத்தாழ 100 கட்டிடங்களில் ஏறி இறங்கியிருக்கின்றார்.

ராடியா டேப்புகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன: மத்திய அரசு

Nira Radia டெல்லி: கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2ஜி ஊழல் வழக்கில் அவர் சாட்சியாக மட்டும் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த டேப்புகள் மாற்றம் செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் நீதிபதி ஜி.எஸ். சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் சர்வீஸ் புரொவைடர்கள் உள்பட 8 முதல் 10 ஏஜென்சிகளுக்கு தொடர்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையின் முதல் சில பக்கங்களை நீதிபதிகள் வாசித்து பார்த்தனர்.

டேப்புகளில் உள்ள பேச்சின் துவக்கமும், இறுதியும் ஒரிஜினல் டேப்புகளில் இருந்து வேறுபடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கே இந்த டேப்புகளை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia

திவாகரன் சேலத்தில் கைது?

Divakaran சென்னை: சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. 

அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசிகலா பிணக்கு, மோதல், விரட்டல், பணப் பதுக்கல் தொடர்பானதாக மாறிவிட்டது.

சமீப காலமாக சசிகலாவின் உறவினர்கள் யாராவது ஒருவர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை, சட்டமீறல் போன்றவற்றுக்காக போலீசாரிடம் புகார் கொடுப்பதும், அவர்களை விரட்டிக் கொண்டு போலீஸ் படை செல்வதுமான காட்சிகள் தொடர்கின்றன.

சமீபத்தில் சசிகலாவின் மற்றொரு நெருங்கிய உறவினர் ராவணன் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் வரை இவர் ஆட்சியிலும் அதிமுகவிலும் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவராகத் திகழ்ந்தவர். விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்ததாக, திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவற்றை இடித்த புகாரின் பேரில் திவாகரனைக் கைது செய்ய போலீஸ் தீவிரமுயற்சி மேற்கொண்டது.

திவாகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க தமிழகம் மற்றும் அவருக்கு தொடர்புள்ள வேறு நகரங்களிலும் தேடுதல் தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவோ, மறுக்கமவோ இல்லை. விவரம் கேட்டால் மழுப்பலாகக் கூறிவருகின்றனர்.

மன்னார்குடி, சிவகங்கை, சேலம் பகுதிகளில் தீவிரமாக அவரைத் தேடி வந்த போலீஸ் படை, இன்று காலை சேலத்தில் திவாகரனைப் பிடித்துவிட்டதாகவும், தகவலை இப்போது ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திவாகரன் கைது என்பது வெறும் வீடு இடிப்பு தொடர்பானது மட்டுமல்ல என்பதால், முழுவதுமாக தகவல்களைக் கறந்த பிறகே அவரை வெளியே காட்டுவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்!
tamil.oneindia

ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் பெட்ரோல்: ராஞ்சி நிர்வாகம் அதிரடி!

Petrol Bunk ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அங்குள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சமீப காலமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் அதிக அளவில் சி்க்கி படுகாயமடைந்ததும், உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், ராஞ்சி நி்ர்வாகம் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அந்த நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்கவும் அந்த நகர நிர்வாகம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர, ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க பெட்ரோல் பங்குகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், அந்த வாகனங்களின் பதிவு எண்களை குறித்து வைக்கவும் அந்த நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே போபால் மற்றும் நொய்டா நகரங்களின் நிர்வாகத்தினரும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
tamil.drivespark

வித்தியாசமான தருணத்தில் எடுக்கப்பட்ட அழகான விலங்குகளின் புகைப்படத் தொகுப்பு (படங்கள் இணை



பொதுவாக காட்டிலும், வீட்டிலும் காணப்படும் விலங்குகள் பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழ்கிறோம்.
மேலும் இவ்வாறான விலங்குகள் மிகவும் அழகாகவும், நமக்கு மிகவும் பிடித்தமானதாகவும் காணப்படுகிறது. அவ்விலங்குகளை அழகான தருணத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தைக் காணலாம்.
manithan