அதிராம்பட்டினத்தில் தற்பொழுது எங்கு பார்த்தாலும் த.மு.மு.கவும், SDPIயையும் இருவரும் இணைந்து ஒட்டியிருக்கும் போஸ்ட்டர்கள் பார்ப்பவருக்கு கலங்கத்தை ஏற்படுத்திவருகிறது என்றால் மிகையல்ல...
SDPI யின் நிலைகள் TNTJ மாவட்ட தலைவரோடு மோதலில் ஈடுபட்டது, உள்ளாட்சித்தேர்தலில் சம்சுதீன் என்பவர் SDPI யைப் பற்றி நோட்டிஸ் அடித்து வெளியிட்டார். தற்பொழுது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தோடு மோதலில் ஈடுபட்டதாக வட்டாரமே அதிர்ந்துபோய் கிடக்கிறது.
இதற்கு பகிரமாக அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாங்கள் மட்டும் சும்மாவா என்பதுபோல மார்க்கெட் பிரசசனையில் முகம் காட்டியும் உள்ளது.
எத்தனையோ பிரச்சனைகள் அதிரை மக்களை சூழ்ந்தும், சூழ்ந்துக்கொண்டும் இருக்கிறது என்பது இங்கு வாழும் மக்களுக்கு நன்றாக தெரியும், சாதரணமாக கூறவேண்டுமானால் கேஸ் ஏஜென்ஸிஸ் கூடுதலாக ரூ. 23 வசூலித்துக்கொண்டிருக்கிறது. மின்சாரத்துறையில் லஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை, போதைப்பொருள் விற்பனை இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் நம் ஊரைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அதிரை இயக்கங்கள் பெயருக்காய் வாயிழித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் சாதனைபுரிந்தோம் என்று சொல்லவே அதிரையில் இயக்கங்கள் என்று சொல்வதே உண்மையான உண்மை. அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே நோக்கமாய் செயல்படுகிறது அதிரை இயக்கங்கள். அல்லாஹ் பயந்துக்கொள்ளுங்கள்.
thanks to www.adiraiplus.com