திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சொந்தமான விடுதியில் விபச்சாரம் நடந்தது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் ரெய்டுக்கு வந்ததும் அதைத் தெரிந்து கொண்டு விபச்சார அழகிகள் இருவர் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி விட்டனர்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சொந்தமான சப்தகிரி விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து கையும் களவுமாக குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து மாறு வேடத்தில் போலீஸார் சென்றனர்.
விடுதிக்குப் போலீஸார் போன போது இரண்டு பேர் இருந்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சு கொடுத்து அழகிகள் இருக்கிறார்களா என்று கேட்டனர். முதலில் ரூ. 5000 கொடுங்கள், வரச் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர் அந்த இருவரும்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அறை அறையாக ரெய்டு நடத்தினர். அழகிகள் பதுங்கியிருந்த ஒரு அறைக்கு அவர்கள் போனபோது அங்கிருந்த 2 பெண்களும் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.