'அல்லாஹ்’ என பச்சை குத்திய அமெரிக்க பாடகி ! இசை நிகழ்ச்சியை ரத்து செய்த மலேசிய அரசு !



அமெரிக்க பாடகி எரிக்கா பது மலேஷியாவில் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை அந்நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது. மேற்படி பாடகி தனது உடலில் அரபு எழுத்தில் ‘அல்லாஹ்’ என்று பச்சை குத்திக்கொண்டு புகைப்படத்திற்கு நின்ற சர்ச்சையை தொடர்ந்தே மலேஷிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

‘ஸ்டார்’ பத்திரிகையில் வெளியான இந்த புகைப்படமானது இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என மலேசிய அரசு கூறியுள்ளது. எனினும் இந்த புகைப்படத்திற்கு ‘ஸ்டார்’ பத்திரிகை மன்னிப்புக் கேட்டுள்ளது.கிரமி விருதை வென்றுள்ள எரிக்கா பது கோலாலம்பூரில் நேற்று தனது இசை நிகழ்ச்சியை நடத்தவிருந்தார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலேஷியாவில் சர்வதேச கலைஞர்கள் நவீன ஆடைகளை அணிந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
எனினும் 41 வயதான எரிக்கா பது ஏற்கனவே மலேஷியா சென்றடைந்துள்ளார். இந்நிலையில் இவரது புகைப்பட சர்ச்சையால் தமது பாதுகாப்பு குறித்து அச்சத்தை வெளியிட்டுள்ளார். மலேஷிய உள்நாட்டு அமைச்சு பதுவிடம் புகைப்படம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. ஏற்கனவே அவர் இந்த புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: